“உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்துடன்” இணைந்து இந்தியப் பெருங்கடல் சுனாமி முன் தயாரிப்பு பயிற்சி குறித்து விழிப்புணர்வுகள் அன்மையில் இடம்பெற்றன.
இதற்கமைவாக சுனாமி எச்சரிக்கை ஒத்திகை மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டின் 5 மாவட்டங்களில் இடம்பெறுகின்றன. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுனாமி ஒத்தினை காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 167சீ கிராம சேவகர் பிரிவிலும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் கண்ணங்குடா மகாவித்தியாலயத்திலும் நாளை 05.11.2025 புதன்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் என்பன இணைந்து நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

