ஐ.பி.எல்.தொடரில் அசத்தினால் டெஸ்ட் அணியில் எப்படி வாய்ப்பு பெற முடியும் : அஸ்வின் கேள்வி

18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் மே.25-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இந்திய முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார். அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 4-வது வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் (5 ஆட்டங்களில் 243 ரன்) களம் கண்டு இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

தற்போது ஐ.பி.எல். பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ள அவர் அதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.இந்நிலையில் ஒரு வீரர் ஐ.பி.எல். தொடரில் அசத்தினால் அவருக்கு எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்க முடியும்? என்று இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *