மட்டக்களப்பு கிரான் கருங்காளியடி பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை நேற்று முன்தினம்(12) கண்ணிவெடி அகற்றும் மெகா அமைப்பினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இடத்தில் இயங்கி வந்த இராணுவ முகாம்; அங்கிருந்து தற்போது இராணுவத்தினர் வெளியேறியதையடுத்து காணி உரிமையாளர்களிடம் காணிகளை இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட காணிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை வவுனியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் மெகா கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்பு மேற்கொண்டு வந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படை மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குண்டை மீட்டு அழிப்பதற்கு நீதிமன்ற நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

