போதைப்பொருளுடன் பாணந்துறை நகரசபை வேட்பாளர் கைது

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் பாணந்துறை நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேக நபர் 102 கிராம் ஐஸ், 6 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

 

பாணந்துறை, மாலமுல்ல, பின்வல ரணவிரு ஹேமந்த பெரேரா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 28 ஆம் திகதி இரவு நடைபெற்ற வைபவத்தின் போது, வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனரை குறிவைத்து ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *