வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்துப் பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
மே மாதம் 03 ஆம் திகதி நடைபெறும் இறுதி அரசியல் பிரச்சாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் விபரங்களை நாளை(04) ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரச்சாரம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெளியாகின்ற செய்தித்தாள்களில் அக்கூட்டங்களின் புகைப்படங்களையும் அறிக்கைகளையும் வெளியிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

