தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு முதல் நாள் நிகழ்வாக காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் வெசாக் தினம் பற்றிய விஷேட நிகழ்வு அதிபர் எஸ்.திருக்குமார் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்சீவன் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயரட்ண கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மாணவர்களினால் பாடசாலை வெசாக் கூடுகள் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் இந் நிகழ்வில் மாணவர்களுக்கு பொலிஸ் நிலையத்தால் நீராகாரம் வழங்கப்பட்டதுடன் வெசாக் தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாக காரைதீவு பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியினால் சிறப்புரையாற்றுப்பட்டது.
அத்துடன் இந் நிகழ்வில் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

