கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு

2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் மாவீரர் நிகழ்வுகளில் இரண்டாம் நாள் நிகழ்வு தமிழர் தாயகத்தில் பல பகுதிகளில் முறையில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

குறித்த நிகழ்வானது கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் வித்தியாசமான முறையில் மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

 

இதன் போது சுண்டிக்குளம் சந்திப் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனைகள் நடைபெற்று பொது திருவுருவப்படத்தினை சுண்டிக்குளம் சந்தியிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபம் வரை மாவீரரைப் பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீதி ஊடாக மங்கள வாத்திய இசையுடன்அழைத்து வரப்பட்டு அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் மலர் வணக்க நிகழ்வும் நடைபெற்றதுடன் மாவீரரின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *