யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயகஉரிமை – பிமல் ரத்நாயக்க

கிளிநொச்சியில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயகஉரிமை என தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று(22) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கங்கள் வர முன்பே மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.

அது அவர்களின்  ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது.

இறந்த தங்களுடைய உறவினர்களை சுதந்திரமாக நினைவு கூரமுடியும். பாதுகாப்புப் படையினரும் அதற்கு தடையாக இருக்கமாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *