இடர் பாதிப்புக்களைத் தணிப்பது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல்

எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள அரிதானதும், ஆபத்துமிக்கதுமான வளிமண்டலக் குழப்பம் காரணமாக வடக்கு மாகாணம் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் இன்று(24) மாலை 5 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

 

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் பிரதீபராஜா, தற்போதைய வானிலைச் சூழல் குறித்து விரிவான விளக்கமளித்தார்.

 

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் (திட்டமிடல், நிதி), முப்படைப் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *