முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் முதன்மை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது நேற்று(24) வீதி ஓரமாக நின்ற மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட முப்புர வட்டாரத்தில் தேவிபுரம் பிரதான வீதியில் கடும் மழை காரணமாகவும் காற்றுக் காரணமாகவும் வீதி ஓரத்திலே நின்ற மரம் ஒன்று வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முட்சக்கர வண்டி மீது பிரண்டு விழுந்துள்ளது.
இந்த நிலையில் வட்டார உறுப்பினர் அவரின் நண்பர்களும் இணைந்து அந்த கிராம சேவையாளர் ஒத்துழைப்போடும் அனர்த்த முகாமைத்துவ உதவியாளர்களுடைய ஒத்துழைப்போடும் குறித்த மரம் அகற்றப்பட்டிருந்தது.
அதேபோன்று மின்சார சபையும் இரவு 11 மணி வரையும் அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து எமக்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள் அவர்களுக்கும் நன்றிகள் எமது பிரதேச சபையானது இன்று இவ்வாறான அசமந்த போக்ககா இருப்பது என்பது உண்மையிலேயே கவலைக்குரிய விடயம் என்றும் வட்டார உறுப்பினர் குகநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

