வவுனியா – ஹொரவபத்தான வீதியில் அமைந்துள்ள சிங்கர் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று(25) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த வவுனியா மாநகரசபையின் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் மற்றும் சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

