யாழ் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19919 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கையின் படி;

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19919 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர்,கோப்பாய், உடுவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 1956 அங்கத்தவர்கள் 24 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.

3717 குடும்பங்களை சேர்ந்த 11952 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 3 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 149 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *