இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரப்படும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. நிதானம் தேவைப்படும் நாள்.

 

ரிஷபம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதுவேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.‌ உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

 

மிதுனம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் உயரும் நாள்.

 

கடகம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி கரமாக சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

 

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்னைகள் இணைத்துப் பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் கடிந்து கொள்ளாதீர்கள். விழிப்புடண் செயல்பட வேண்டியநாள்.

 

கன்னி

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.

 

துலாம்

குடும்பத்தில் உள்ள உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

 

விருச்சிகம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

 

தனுசு

பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

 

மகரம்

துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

 

கும்பம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

 

மீனம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரி தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *