கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச வைத்தியசாலையில் இராணுவத்தினரால் சுத்தம் செய்யும் சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்றைய தினம்(02) இடம்பெற்றிருந்தது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த இடர் நிலைமையின் போது குறித்த மருத்துவமனைக்கு ஏற்பட்ட சூழல் மற்றும் பௌதீகப் பாதிப்புகளை சீர் செய்யும் நோக்கில் குறித்த சிரமதான நடவடிக்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டதுடன் மரக்கொப்புக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கடதாசி உள்ளடங்கலான கழிவுப் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு சூழலை பாதுகாக்கும் நோக்கில் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டன.

