மழையால் பாதிப்புற்ற மக்களை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பார்வையிட்டார்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவின் சிராட்டிகுளம் கிராமம் மிகவும் மழையால் பாதிக்கப்பட்டது.

 

அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புற்று உடமைகளையும் கால்நடைகளையும் விவசாயத்தையும் இழந்து இருந்தனர்.

 

அதனை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர்ர் ஆகியோர் இன்று(05)காலை 10:00 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டதோடு அப்பகுதி மக்கள் காலம் காலமாக பாதிப்புறுவதால் மாற்றுத்தங்குமிடத்தினைத் தயார்படுத்தித் தருவதாகவும் தெரிவித்தார்.

 

அத்ததோடு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கியதோடு சேதமுற்ற பாலம் ஆகியவற்றையும் புனரமைத்துத் தருவதாகவும் தெரிவித்தார்.

 

அத்தோடு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரும் உதவிகளை இவ்விடத்தில் வழங்கினர்.

 

பாதிப்புற்ற மக்களைப் பார்வையிட கிராம சேவகர், பிரதேச சபை உதவி தவிசாளர், தேசிய மக்கள் சக்தி மாவட்ட இணைப்பாளர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் வருகை தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *