கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவர் கடந்த 05ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டார்.
காய்ச்சலுக்கு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்றபோது இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலேயே எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டது.
இந் நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று(07) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கண்ணை நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பரமானந்தன் கிருபாகரன் எனும் கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

