யாழ்ப்பாணம் – பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் மாலை உயிரிழந்தனர்.
கொக்குவில் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்ணைக் கடலில் நீந்தச் சென்ற நால்வர் சுழியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைப் பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள் பொலிஸாரின் உதவியுடன் நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

