கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குற்பட்ட அக்கராஜன் குளத்தின் அணைக்கட்டில் உடைவு காணப்படுகின்றது.
இந்நிலையில் விவசாயிகள் சேர்ந்து மண்மூடை கொண்டு அணைக்கட்டை பாதுகாக்கும் முயற்சியில் இன்று(08) ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப உத்தியோகத்தரின் மேற்பார்வையில் எட்டு கமக்காரர் அமைப்பைச்சேர்ந்த 300ற்கு மேற்பட்ட விவசாயிகள் சேர்ந்து அணைக்கட்டை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

