முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலப்பிரிவில் இன்று(09) வெள்ள பாதிப்பு நிவாரணக் கொடுப்பனவு 25,000 வழங்கி வைக்கப்பட்டதோடு நிவாரணம் மற்றும் நடமாடும் சேவையும் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன், பிரதேச செயலாளர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஜெயம் நாடக கலைஞர்களால் சமகால கருத்தியல் நாடகம் அளிக்கை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


