பள்ளிமுனையில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது

மன்னார் – பள்ளிமுனை பகுதியில், கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய, மன்னார் பிரிவு ஊழல் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (10) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அவர்களிடமிருந்து, 06 கிலோகிராம் 115 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 34 மற்றும் 41 வயதுடைய, மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *