மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதியில், கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால், நேற்று(11) காலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கார் ஒன்றினூடாக 92 கிலோகிராம் 50 கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த கஞ்சாவை கொண்டு செல்வதற்கு உதவிய மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் 25 மற்றும் 26 வயதுடைய, வவுனியா மற்றும் மருதங்கேணி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

