நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்கும் ’45: தி மூவி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு திகதி அறிவிப்பு!!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிவ ராஜ்குமார்- உபேந்திரா – ராஜ் பி.ஷெட்டி -ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ 45 : தி மூவி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இசைக் கலைஞரான அர்ஜுன் ஜன்யா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் ’45: தி மூவி’ எனும் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார் , உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி ஆகியோர் கதையை வழி நடத்தி செல்லும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநரான அர்ஜுன் ஜன்யா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி வித் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூரஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *