இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு தேவை – கடற்றொழில் அமைச்சர்

இந்திய மீனவர்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

 

இது தொடர்பாக கடத்தொழில் அமைச்சர் தெரிவிக்கையில், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதன் காரணமாகவும் கடற்படையினர் ஆழ் கடலுக்குச் செல்ல முடியாததின் காரணமாகவும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்திய துணைத்தூதர் சாய் முரளி அல்லது தமிழ்நாட்டு அமைச்சர் ஸ்டாலின் அல்லது மோடி ஆகியோர்தான் இதற்கு ஒரு உரிய தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்.

 

இந்திய கடலிலேயே தற்போது திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்திய மீனவர்கள் கட்டுப்பாடு இன்றி தமது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதற்கு உரிய தீர்வினை விரைவிலே எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் மிக விரைவில் இந்திய மீனவர்களுக்கு முடிவு கட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *