நாட்டில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளும் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு மயில்வானபுரம் கொழுந்துப்புலவு ஆகிய பகுதிகளில் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட கத்தரி, மிளகாய் மற்றும் கறிமிளகாய் என பல்வேறு மரக்கறி வகைகளும் வெள்ளத்தில் மூழ்கியது.
இதன் காரணமாக தற்பொழுது அழுகிய நிலையில் எந்தப் பயனும் பெற முடியாத நிலையில் காணப்படுவதாகவும் குறித்த அழிவு காரணமாக பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தற்போதைய அரசாங்கம் உரிய முறையில் பதிவினை மேற்கொண்டு தற்பொழுது பாதிக்கப்பட்டவர்களுக்கு அழிவை வழங்கி வரும் நிலையில் அதே போன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளாகிய எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எமக்கான பதிவினை தற்பொழுது மேற்கொண்டு வரும் நிலையில் உரிய காலத்தில் பாதிக்கப்பட்ட எமக்கான நஷ்ட ஈட்டினைபெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

