வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கோரக்கன்கட்டு கிராம அலுவலர் பிரிவுள்ள 90அரச உத்தியோகத்தர்களுக்கான நிவாரணப்பொதிகள் இன்று(14) வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா வர்த்தகர்கள் மற்றும் மக்களின் பங்களிப்பில் குறித்த நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

