கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று(15) சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பினை வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக தர்மபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 125 லீற்றர் சட்டவிரோத கசிப்பினை பொலிஸார் பறிமுதல் செய்யதுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

