2026ம் ஆண்டுக்கான பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சனால் இன்று(15) சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
ஆதரவாக தமிழரசுக்கட்சியின் 10 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி 0 1உறுப்பினரும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி 01 உறுப்பினரும், சுயேட்சைக்குழு 02 இன் 01 உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக தேசிய மக்கள் சக்தியின் 02 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு 01 இன் 01உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.
நடுநிலைமையாக ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் 03 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியின் 01உறுப்பினரும் வாக்களித்தனர்.
20 உறுப்பினர்களைக் கொண்ட பூநகரி பிரதேச சபையில் தமிழரசுக்கட்சி சார்பாக 10 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 03 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 03 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 01 உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக 01 உறுப்பினரும், சுயேட்சைக்குழு -01சார்பாக 01உறுப்பினரும், சுயேட்சைக்குழு -02 சார்பாக 01 உறுப்பினருமாக 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

