முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று(05) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.

அதில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், மாந்தைகிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

குறித்த தேர்தலில் 1250 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 137 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *