இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

 

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

 

மிதுனம்

குடும்பத்தில் சின்ன சின்னவாகுவதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அனாவசிய செலவுகளை குறைக்க பாருங்கள். வியாபாரத்தில்பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

 

கடகம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மகிழ்ச்சியான நாள்.

 

சிம்மம்

உங்கள் செயலில் வேகம்கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்புவார். சாதிக்கும் நாள்.

 

கன்னி

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

 

துலாம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில சமயங்களில் விரக்கியாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவரின் வேலையை சேர்த்து பார்க்க வேண்டி வரும். பொறுமை தேவைப்படும் நாள்.

 

விருச்சிகம்

கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லன நடக்கும் நாள்.

 

தனுசு

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.

 

மகரம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

 

கும்பம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

 

மீனம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். முக்கிற பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பழையசரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்மங்களை சொல்லித் தருவார். கனவு நனவாகும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *