மகாவலி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதிய புனித பூமிக்குச் செல்லும் வீதி நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மகாவலி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் சோமாவதிய – சுங்காவில வீதி நீரில் மூழ்கியுள்ளதையடுத்து, இன்று(07) காலை 8.30 மணி முதல் குறித்த வீதியிலான வாகனப் போக்குவரத்தை இடைநிறுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

