அம்பாறை மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் மனூஸ் அபூபக்கர் காத்தான்குடியில் கௌரவிப்பு

இளைஞர் யுவதிகளை தலைமைத்துவ ரீதியில் பயிற்றுவிக்கும் மூன்று மாத கால விசேட பாடநெறி ஒன்றினை காத்தான்குடி ஐவேர் அரச சார்பற்ற நிறுவனம் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்து.

 

இப் பாடநெறியில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஐவேர் நிறுவனத்தின் தலைவி திருமதி அனீசா பிர்தெளஸ் தலைமையில் நடைபெற்றது.

 

ரதான வளவாளராக கலந்து கொண்டமைக்காக அம்பாறை மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் மனூஸ் அபூபக்கர் கௌரவிக்கப்பட்டார்.

 

குறித்த நிகழ்வு காத்தான்குடி பீஸ்வே ஹோட்டலில் இடம் பெற்றது. மனூஸ் அபூபக்கருக்கான கௌரவத்தை காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் நினைவுச் சின்னத்தை வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *