அத்துடன், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தடைப்பட்டிருக்கும் கரு வளர்ச்சி சம்மந்தமான மருத்துவ செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதிலுள்ள தடைகளை ஆராய்ந்து, அதனை மீள ஆரம்பிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நீண்ட நாள் குறைபாடாகவிருக்கும் மருந்து வகைகளைக் கொண்டு செல்வதற்கான லொறி இன்மை, மட்டக்களப்பு சிறைச்சாலையை ஒதுக்கப்பட்ட மாற்றிடத்திற்கு மாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும், சுகாதார அமைச்சர் நீதி அமைச்சரிடம் கலந்துரையாடி அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சுகாதாரத் துறை சார் பல்வேறு பிரச்சினைகளைக் கலந்துரையாடும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார அதிகாரிகள் மற்றும் துறை சார் நிபுணர்களுடனும் விசேட கூட்டம் ஒன்றை நடாத்தி குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி குறித்த பிரச்சினைகளை சீர் செய்வதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

