திருக்கோவிலில் டெங்கு கட்டுப்பாட்டுக்கு புதிய வைத்திய அதிகாரி நியமனம்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், Dr. உவைஸ் பாறூக் பதில் சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய,இன்று (23) திங்கட்கிழமை முதல் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பதில் கடமையாற்றுவதற்கான நியமனத்தை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.ஸஹீலா இஸ்ஸதீன் இன்று வழங்கி வைத்தார்.

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *