பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் கால்கோள் விழா

மட்டக்களப்பு கல்குடா பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களின் கால்கோள் விழா அதிபர் கதிர்காமநாதன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஜெயக்குமணன், பாடசாலை ஈபிஎஸ்ஐ இணைப்பாளர் விஜிலியஸ், ஆசிரிய ஆலோசகர் அருளேந்திரன், எச்எம்பி முகாமையாளர், மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள், பிஓசி உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் குழு செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இத்துடன் கெளரவ பிரதம மந்திரியும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *