விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்கள் வரவேற்பு விழா இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் புதிதாக தரம் 01 வகுப்புக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது நேற்று பாடசாலை அதிபர் தம்பிராசா தவராசா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் புதிய மாணவர்கள் மற்றும் அதிதிகள் பண்ட் வாத்தியக்குழுவினரின் வாத்திய மரியாதையுடன் மலர் மாலைகள் அணிவித்து பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மங்களவிளக்கேற்றல் மற்றும் மாணவர்களின் குரலில் வரவேற்பு உரை மற்றும் சிறார்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் மாணர்களுக்கு பரிசில்களும் அனுரனையாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது அதிதிகளின் உரையும் இடம்பெற்றது..
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோத்தர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், அனுசரனையாளர்கள், திருக்கோவில் மக்கள், வங்கி முகாமையாளர், உத்தியோத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

