புனித மிக்கேல் கல்லூரியில் புனர்நிர்மானம் மேற்கொள்ளப்பட்ட வரவேற்புக் கோபுரத்தின் புனித மிக்கேல் திருவுருவச்சிலை திரை நீக்கும் நிகழ்வான பாடசாலையில் அதிபர் அன்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் நேற்று(29) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அருட் தந்தை போல் சற்குணநாயகம் அடிகளினால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டு புனித மிக்கேலின் திருவுருவச்சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
புனித மிக்கேல் கல்லூரியின் 94ஆம் ஆண்டில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் புனர்நிர்மாணம் மேற்கொள்ளப்பட்ட வரவேற்புக் கோபுரம் நேற்று திரை நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

