வாழைச்சேனையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கிளை திறப்பு

எமது பிரதேச மாணவர்களுக்கான சுரக்சா காப்புறுதி உள்ளடங்கலாக காப்புறுதி சேவையை வழங்கும் முகமாக இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தனது சேவையை விரிவுபடுத்தும் முகமாக வாழைச்சேனை கிளையினை பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத் தொகுதியில் தனது கிளையினை கிளைப் பொறுப்பாளர் நடேசன் காண்டீபன் தலைமையில் நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளர் ஜெகத் வெல்லாகம மற்றும் வடகிழக்கு பொறுப்பாளர் சத்தியன் கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் புவனேந்திரன் மட்டக்களப்பு கிளையின் பிரதான முகாமையாளர் ரவிச்சந்திரன் ஆகியோரின் பங்குபற்றுதலோடு நிறைவேற்று பணிப்பாளரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் வாழைச்சேனை முகாமையாளர், பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர் டிலக்ஷன், மதத்தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஏனைய தனியார் நிறுவனங்களின் முகாமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவன ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு சேமிப்பு, காப்புறுதி, ஓய்வூதியம், முதலீடு என பல்வேறு சேவைகளை நிறுவனம் வழங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *