மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட பொங்கல் விழா நிகழ்வு இன்று கடுக்காமுனை விநாயகர் மாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களான றொட்னி பெர்ணாண்டோ, மற்றும் திருமதி நிரஞ்சனா றொட்னி பெர்ணாண்டோ ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர். தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி சுகன்யா பிரகீத், மத்தி வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி. காயத்திரி வேணுதாசன் ஆகியோரின் வழிகாட்டுதலோடு விவசாய போதனாசிரியர் என்.பார்த்தீபன் அவர்களது ஒழுங்குபடுத்தலோடு விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்களது பங்களிப்போடும் நடைபெற்ற நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், கமநல அமைப்புகள், ஆலய பிரதம குரு மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது பாரம்பரிய முறைப்படி நெல் அறுவடை செய்து நெல்குற்றி புத்தரிசி பொங்கலில் படையலிட்டு சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பூசை வழிபாடுகளும் மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவும் இடம்பெற்றது.

