மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று(05) இடம்பெற்றது.
இதன் போது அலுவலக நிர்வாக விடயங்கள், உத்தியோகத்தர்களில் இடம்மாற்றம், அலுவலக வாகன பாவனை, அஸ்வெசும, மற்றும் புதிய பயிற்சிகள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் பிரதேச செயலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றைக் கையாளுவதற்கான உபாய முறைகளை அரசாங்க அதிபர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், பிரதம உள்ளக கணக்காய்வாளர் சசிகரன், பிரதம பொறியியலாளர் சுமன், திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *