பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியனுக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர்கள் வாழ்த்து

பாராளுமன்றக் குழுத் தலைவராக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்கப்பட்டமைக்கு இன்று(05)  வாகரையில் இலங்கை தமிழரசு கட்சியின் கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட பிரதேச உறுப்பினர்கள் அவரைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவரது உருவப்படம் தாங்கிய பேனர் கட்டி மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தினர்.

இதன்போது அவர் மாவட்டத்தில் ஆற்றிய அரசியல் பணி தொடர்பாகவும் இளம் வயதில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர் தெரிவு செய்யப்பட்டமைக்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு தமிழரசுக் கட்சியின் உயர் பீடத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *