“சிறந்த மனித விழுமியங்களை வளர்ப்பதன் ஊடாக பொதுமக்களுக்கான மேம்பட்ட சேவையை வழங்குதல்” தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மேற்குறித்த விடயம் தொடர்பான செயலமர்வானது நேற்று(05) மற்றும் இன்று(06) ம் திகதிகளில் புதிய மாவட்ட செயலகத்தில் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், இச் செயலமர்வின் முதல் நாள் தெளிவூட்டல் நிகழ்வு நேற்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக இடம்பெற்ற முதல் நாள் செயலமர்வில் வளவாளராக ஓய்வு நிலை மேலதிக அரசாங்க அதிபர் புவனேந்திரன் கலந்து கொண்டு சிறந்த முறையில் வளவாண்மை மேற்கொண்டிருந்தார்.
உத்தியோகத்தர்கள் சிறந்த மனித விழுமியங்களை வளர்த்துக்கொள்வதனூடாக பொதுமக்களுக்கு கண்ணியமான அரச சேவையினை வழங்குவதற்கு வழிவகுக்கும் எனும் நோக்கில், சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு இச் செயலமர்வானது மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

