தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின், புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு நேற்று(06) பிரதேச செயலாளர் ஸ்ரீபதி தலைமையில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு உரிய பயனாளிகளிடத்தில் கையளிக்கப்பட்டது.
மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.
இதில் உதவி பிரதேச செயலாளர், குறித்த கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

