வைஎம்எம் மாவடிப்பள்ளி மூலம் நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு

வைஎம்எம் மாவடிப்பள்ளி அனுசரணையில் மாவடிப்பள்ளி வைஎம்எம் இன் போசகர் கௌரவ பிரதேச சபையின் உறுப்பினர் ஹில்மி ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தின் நீர்த்தாங்கிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு வைஎம்எம் மாவடிப்பள்ளி தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின்
உத்தியோகத்தருமான சர்ராஜ்
தலைமையில் மாவடிப்பள்ளி ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று(06) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை வைஎம்எம் பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அதிபர் றியாஸ், பிரதமஅதிதியாகவும், வைஎம்எம் பாலமுனை தலைவரும் பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸிறாஜ் அதிதியாகவும் கலந்து கொண்டு பயனாளிகளிடம் நீர்த்தாங்கிகளை உத்தியோகப்பூர்வமாக வழங்கி வைத்தனர்.

அகில இலங்கை வைஎம்எம் பேரவையின்
அம்பாறை மாவட்டத்தின் விசேட செயத் திட்டத்தின் ஊடாக இவ்வாண்டு 300 பயனாளிகளுக்கு (AMP/2026/DPWT/300) மாவட்டத்தின் 17 வைஎம்எம் கிளைகள் மூலம் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *