ஜெயந்தியாய வீதிகளுக்கு மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்

புனித ரமழான் காலம் ஆரம்பமாவதை முன்னிட்டு பிரதேச மக்களின் நன்மைகருதி கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரதேச வீதிகளுக்கு ஒளியூட்டும் நடவடிக்கை கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபை உறுப்பினர் தாஹிரால் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக ரிதிதென்ன பிரதேசத்தில் பழுதடைந்து காணப்பட்ட மின்குமிழ்கள் மாற்றப்பட்டு புதிய மின்குமிழ்கள் பொருத்தப்பட்டதுடன், இருள் சூழ்ந்து காணப்படும் இடங்களுக்கும் புதிய மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு ஒளியூட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், இதன் தொடராக ஜெயந்தியாய பிரதேசங்களிலும் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *