திருக்கோவிலில் 10வது வருட பொங்கல் விழாவும் கௌரவப்பு நிகழ்வும்

திருக்கோவில் பிரதேச சமூக தரிசனம் ஒன்றியம் எஸ்விஓ தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் சமுக சமய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்திய 10வது வருட பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் திருக்கோவில் 04 காயத்திரி கிராமம் பகுதியில் இடம்பெற்றது.

 

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில் திருக்கோவில் பிரதேச சமூக தரிசனம் ஒன்றியம் எஸ்விஓ தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் சமூக சமய அமைப்புக்கள் ஒன்றிணைந்நு நடாத்திய 10வது வருட பொங்கல் விழாவும் கௌரவ நிகழ்வு நேற்று(08) இடம்பெற்றது

 

இந் நிகழ்வானது சமூக தரிசனம் ஒன்றியம் எஸ்விஓ தொண்டர் அமைப்பின் தலைமைக் காரியாலத்தில் எஸ்விஓ அமைப்பின் ஸ்தாபகர் நந்தபாலு தலைமையில் இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய மாணவர்கள் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

அத்துடன் பொது அமைப்புக்களின் பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

 

மேலும் குறித்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளூமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், சமயத்தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் தலைமைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதிதிகளின் விசேட உரையும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *