பட்டிப்பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் சுதாகரனின் ஏற்பாட்டில் இன்று(10) பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், வைத்தியர் சிறிநாத், பட்டிப்பளை பிரதேச தவிசாளர் கிரேஷ்குமார் மற்றும் பல அமைப்புகளின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரீநேசன் கருத்துத் தெரிவிக்கையில், சட்டவிரோதமான மண் அகழ்வு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் கேள்விக்கான பதிலை பட்டிப்பளை பிரதேச தவிசாளர் 25% வீதமாக மண் அகழ்வு குறைக்கப்படுள்ளதாகவும் கருத்துக்களை முன்வைத்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவிக்கும் போது முறையற்ற தயாரிப்பான வடி சாராயம் தொடர்பான கேள்விகளை முன்வைத்து இதற்கான நடவடிக்கைகளையும் உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டுமென கருத்துக்களை முன்வைத்தார்.

