தொழுநோய் தொடர்பாக பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் கதிரவெளி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் கட்டுமுறிவு சந்தி தொடக்கம் திருகோணமலை பிரதான வீதி ஊடாக கதிரா எகெடமியை வந்தடைந்து அங்கிருந்து கண்காட்சி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
தொழு நோயாளர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளில் இப்பேரணி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன், பிரதேச சபை செயலாளர் குயின்ரஸ், கதிரவெளி பாடசாலை அதிபர் இராமசந்திரன் மற்றும் வாகரை பாடசாலை அதிபர் கலந்து கொண்டனர்.
இதில் பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், தாய்மார் கழக உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள் , பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாடசாலையின் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

