அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட காலத் தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி நேற்று(10) வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் மசூத் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் இஸ்ஸதீனால் திறந்து வைக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவிற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் வைத்தியர் டொக்டர் மாஹிர் உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

