திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; 10 பேருக்குப் பிணை

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் ரூபா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளை மேற்படி 10 எதிராளிகளும் சமர்பிக்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *