கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவில் 20 வீட்டுத் திட்டத்தின் 37 பயனாளிகளுக்கான காணிக் கச்சேரி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(10) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன், கிராம சேவை உத்தியோகத்தர், காணிக் கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *